Department of Housing – Central Province

தகவல் அறியும் உரிமை

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவல் அறியும் உரிமைச் சட்டமானது 2016 ஜூன் 24 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, 2017 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமைச்சுகள் மற்றும் அரச அதிகாரசபைகளுக்கு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டமானது பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் பொது அதிகார சபைகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், நல்லாட்சிக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கின்றது.

  • தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் எண். සිංහල  |  தமிழ்  |  English

தகவலைக் கோருதல்

RTI 01 படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட தகவல் கோரும் விண்ணப்பத்தை அல்லது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய அத்தியாவசியத் தகவல்களைக் கொண்ட கடிதத்தை மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதன் மூலமோ அல்லது housingdept.cp@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ நீங்கள் தகவல்களைக் கோரலாம்.

குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்

திருமதி. டீ.டப்ளியூ.ஜீ.கே. வடுகொட

மாகாண வீடமைப்பு ஆணையாளர்,

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களம்

தொலைபேசி: 081-2204404

தொலைநகல்: 081-2222457

மின்னஞ்சல்: housingdept.cp@gmail.com

தகவல் உத்தியோகத்தர்

பெயர்

பதவி

தொலைபேசி

மின்னஞ்சல்

திருமதி. பீ.எம். சீதா

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

081-3839425

housingdept.cp@gmail.com

தகவல் வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள்

 

வ.இல

தகவல் வழங்கும் முறை

கட்டணம்

01

விண்ணப்பப் படிவத்திற்காக

இலவசம்

02

A4 அளவு நிழற்படப் பிரதி (ஒரு பக்கத்திற்கு)

ரூ. 2.00

03

Legal மற்றும் A3 அளவு நிழற்படப் பிரதி (ஒரு பக்கத்திற்கு)

ரூ. 4.00

04

A3 அளவை விடப் பெரிய நிழற்படப் பிரதி (ஒரு பக்கத்திற்கு)

உண்மையான செலவு

05

A4 அளவு கணினிப் பிரதியாக்கம் (Printout) (ஒரு பக்கத்திற்கு

ரூ. 4.00

06

Legal மற்றும் A3 அளவு கணினிப் பிரதியாக்கம்

ரூ. 4.00

07

A3 அளவை விடப் பெரிய கணினிப் பிரதியாக்கம்

உண்மையான செலவு

08

விண்ணப்பதாரியினால் வழங்கப்படும் இலத்திரனியல் சாதனத்திற்குத் தகவல்களைப் பிரதி செய்தல் (ஒரு விடயத்திற்கு)

ரூ. 20.00

09

நிறுவனத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் சாதனத்தில் தகவல்களை வழங்குதல்

உண்மையான செலவு

10

மாதிரிப் படிவங்களை (Samples) வழங்குதல்

உண்மையான செலவு

11

ஆவணமொன்றை அல்லது விடயத்தைப் பரிசீலனை செய்தல் / ஆய்வு செய்தல் / நிர்மாணத் துறையைப் பரிசோதனை செய்தல் (முதல் ஒரு மணித்தியாலம் இலவசம்)

மேலதிக ஒரு மணித்தியாலத்திற்கு ரூ. 50.00

12

மின்னஞ்சல் மூலம் தகவல்களை வழங்குதல்

இலவசம்

முக்கிய இணைப்புகள்