Department of Housing – Central Province

எங்களைப் பற்றி

1989 ஆம் ஆண்டு முதல் மத்திய மாகாண போக்குவரத்து, பெருந்தெருக்கள், கலாசார, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஒரு உப பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களமானது, 1994 ஆம் ஆண்டு முதல் பதில் வீடமைப்பு ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்ததோடு, 1999 ஆம் ஆண்டில் ஒரு தனித் திணைக்களமாகத் தாபிக்கப்பட்டது.

 

இத்திணைக்களமானது 1993 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க மத்திய மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நியதிச்சட்டம் (இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி பத்திரிகை – 1994.07.01 IV (அ) பகுதி) மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் மாகாண சபைகள் பட்டியலின் இலக்கம் 5 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை விடயதானத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகச் செயற்படுகின்றது.

 

மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தின் மூலமும் அதன் கீழ் இயங்கும் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா வாடகைச் சபைகள் மூலமும் 2002 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மற்றும் 1980 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்கச் சட்டங்களினால் திருத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்திற்கு அமைவாக நிறுவனத்தின் சட்டப் பின்னணி

மாகாண சபைகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு

5. மாகாணங்களில் வீடமைப்பும் நிர்மாணத்துறையும்

5:1 உதவியளிக்கப்பட்ட கைவினை வீடமைப்புத் திட்டங்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் கட்டட உபகரணங்களை வழங்குதல் உள்ளடங்கலாக (தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கருத்திட்டங்கள் அல்லாத) மாகாண வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், இணைப்பாக்கம் செய்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் பின்ளாய்வு செய்தல்.

5:2 வாடகைக்குக் குடியிருப்போரைப் பாதுகாத்தல் சட்டம் மற்றும் வாடகைச் சட்டம் என்பவற்றை மாகாணத்தினுள் நடைமுறைப்படுத்தல்.

5:3 இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களுடன் தொடர்புடைய நிர்மாணப் பணிகள்.

நிறுவனத்திற்குத் தற்போது செல்லுபடியாகும் சட்டங்கள் / நியதிச்சட்டங்கள்

1993 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க மத்திய மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நியதிச்சட்டம்

1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டம்

1980 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்க வாடகைத் திருத்தச் சட்டம்

2002 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க வாடகைத் திருத்தச் சட்டம்

திருமதி. டீ.டப்ளியூ.ஜீ.கே. வடுகொட

ஆணையாளர்

081 - 2204404

திருமதி. பீ.எம். சீதா

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

081-3839425

திரு. எம்.யூ.எம். ஜயதிலக

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

052-2224634

திருமதி. ஜீ.ஆர்.எம்.பீ.எல். ரணவீர

பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

081-2222457

திருமதி. ஏ.எம்.பீ. சந்திரமெனிகே

நிதியியல் உதவியாளர்

081-2222457

திருமதி. எம்.டீ.எம்.ஆர்.கே. தசநாயக்க

பிரிவுத் தலைவர் (அபிவிருத்தி)

081-2222457